மனித இதயமும்,வாகன இஞ்சினும்

ஒரு மருத்துவர் ஒருவர் தன்னுடைய இரு சக்கர வாகனம் ஒன்றை பழுது பார்க்க அருகில் உள்ள பணிமனைக்கு கொண்டு சென்றார்.அங்கிருந்த பணியாளர் வாகனத்தை பரிசோதித்து விட்டு வாகனத்தின் இஞ்சின் பகுதியில் குறைபாடு உள்ளதாகவும் அதை பிரித்து சரி செய்து தருவதாகவும் சொன்னார்.

மருத்துவரும் சிறிது யோசித்து விட்டு சரி தம்பி கொஞ்சம் சீக்கிரம் கொடுங்கள் என்றார்.உடனே வாகனத்தின் இஞ்சின் பகுதியை பிரித்து வேலை செய்ய ஆரம்பித்தான்.

சிறிது நேரத்திற்கு பிறகு அந்த பணியாள் மருத்துவரிடம் கேட்டான் ஐயா நீங்கள் எதில் சிறப்பு பெற்ற மருத்துவர்.அதற்கு மருத்துவர் சொன்னார் நான் ஒரு இருதய அருவை சிகிச்சை நிபுணர்.இருதயத்தில் காணப்படும் பழுதுகளை சரிபார்ப்பது எனது வேலை என்று பதில் அளித்தார்.



ஐயா இந்த இரண்டு சக்கர வாகனத்தில் முக்கியமான பகுதி எது என்று சொல்லுவீர்களா?என்று அந்த பணியாள் மருத்துவரை பார்த்து கேட்டான்.அவரும் இதில் என்னப்பா சந்தேகம்,இஞ்சின் தானே இதில் முக்கியம் என்றார்.

உடனே அந்த பணியாள் சொன்னார் ஐயா மனிதர்களின் முக்கியமான பகுதியான இருதயம் வேலை செய்யாவிட்டால் நீங்கள் அதை பழுது பார்த்து சரி செய்கிறீர்கள்.

நாங்களும் அதே போல் தான் பழுதான இந்த வாகனத்தின் இஞ்சின் பகுதியை பிரித்து பழுது பார்த்து ஓடவைக்கின்றோம்.

ஆனால் நாங்கள் இஞ்சினை பிரித்து பழுது பார்த்தால் எங்களுக்கு நீங்கள் கொடுப்பது வெறும் 500,அல்லது 1000 ரூபாயோ தான்.

ஆனால் நீங்கள் இருதயத்தை பிரித்து பழுது பார்த்து சரி செய்வதற்கு வாங்கும் பணம் ஒரு லட்சமோ அல்லது அதற்கு அதிகமாகவோ உள்ளது.ஏன் ஐயா இந்த பாரபட்சம் என்று கேட்டான்.

இதை கேட்ட அந்த மருத்துவர் ஒருக்கணம் அமைதியாக இருந்து விட்டு பின்பு சொன்னார்


தம்பி நீங்கள் வாகனத்தின் இஞ்சினை பிரிக்கும் பொழுது அதை நிறுத்தி விடுகிறீர்கள்.பின்புதான் அதை சரி செய்கிறீர்கள்.

ஆனால் நாங்கள் மனிதனின் இருதயத்தை பிரிக்கும் பொழுது அதை நிறுத்தாமல் ஓடும் நிலையிலேயே சரி செய்கின்றோம்.இதனால் தான் எங்களுக்கு அதிகம் உங்களுக்கு குறைவு என்று சொன்னார்.

அதன் பிறகு அந்த பணியாள் பேசவே இல்லை...........................

இது எப்படி இருக்கு உங்க கருத்தை சொல்லுங்களேன்