மூளைக்கு விலை என்ன?

இந்திய மூளைக்கு என்ன விலை?

நண்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்.இன்றைக்கு நாம் படிக்கப்போகு கதை இந்திய மூளைக்கு என்ன விலை என்பதே.தயவு செய்து யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.நமக்கு இந்தியாவின் மேல் பற்று இல்லாமல் இல்லை.இதை கதைக்கு மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

வெளிநாடு ஒன்றில் மருத்துவக் கண்காட்சி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.அதில் மூளைக்கு என்று ஒரு தனி பகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது.அந்த பகுதியில் எல்லா நாட்டு மூளைகளும் ஒவ்வொரு பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டு அதின் மேல் ஒரு வெள்ளை நிற காகிதத்தில் அதன் விலைகள் எழுதப்பட்டு இருந்தது.

ஒரு சுற்றுலா பயனிகள் ஒரு கூட்டமாக சென்று அந்த கண்காட்சியின் நடத்துனர்களிடம் மிகவும் கோபமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.என்ன விஷயம் என்று கேட்டார் அந்த கண்காட்சியின் மேளாலர்.அவர் உடனே அந்த மூளைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று அந்த பாட்டில்களை காண்பித்தார்கள்.

அதில் ஜப்பான்-500 டாலர்,இத்தாலி-1000 டாலர்,ஜெர்மன்-1500 டாலர்,அமேரிக்கா-2000 டாலர்,இப்படி பல மூளைகளுக்கு விலை எழுதப்பட்டு இருந்தது கடைசியாக இந்தியா-10,000 டாலர் எழுதப்பட்டு இருந்தது.

அந்த பயணிகள் மிகவும் கோபமாக எங்கள் நாடு எவ்வளவோ கண்டுபிடிப்புகளை உலக்குக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.ஆனால் அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் எங்கள் நாடுகளை சேர்ந்த மூளைகளுக்கு குறைந்த விலையை நிர்ணயித்து உள்ளீர்கள் என்று கூச்சலிட்டனர்.

உடனே அந்த மேளாலர் சொன்னார் நான் மிகவும் சரியாகத்தான் விலை நிர்ணயம் செய்து இருக்கிறேன்.எப்படி என்று உங்களுக்கு சந்தேகமானால் நான் விளக்கம் சொல்லுகிறேன்.

முதலாவது ஜப்பானை எடுத்துக்கொள்ளுவோம்.இது உலகத்தில் அநேக எலக்ட்ரானிக் பொருட்களை அறிமுகப்படுத்தி தன்னுடைய மூளையை முழுவதுமாக உபயோகித்து உள்ளது எனவே தான் இந்த ஜப்பான் மூளைக்கு 500 டாலர் விலை.

அடுத்து இத்தாலி இதுவும் தன் கண்டு பிடிப்புகளை உலகில் அதிகமாக பரவ விட்டுள்ளது.தன் மூளையில் 90% உபயோகித்து உள்ளது.எனவேதான் இதற்கு 1000 டாலர் விலை.

அடுத்தது ஜெர்மன் இது இஞ்னியரிங் மற்றும் தொழில்நுட்பத்தில் அதிகமாக தன் மூளையை 75% உபயோகித்து உள்ளது.எனவே இதற்கு 1500 டாலர்
அப்புறம் அமேரிக்கா இது இராணுவ தளவாடங்கள்,விண்வெளி ஆராய்ச்சி என்று தன் மூளையை 50% செலவு செய்து விட்டது.மீதம் 50% மிச்சம் உள்ளது எனவே விலை 2000 டாலர்

ஆனால் இந்தியாவை பொருத்தவரை மூளை புத்தம் புதியதாக வைத்துள்ளது.நீங்களே சொல்லுங்கள் உபயோகம் குறைவாக உள்ள பொருளுக்கு விலை எப்பொழுதும் அதிகம் தானே.பார்வையாளர்கள் எல்லோரும் அமைதியாக கலைந்து போனார்கள்.

ஆனால் இங்கு எல்லோரும் என்னை துரத்துவதாக எனக்கு தோன்றுகிறது.என்ன நண்பர்களே சரிதானே!

புரபஸரும்,மாணவர்களும்.

புரபஸரும்,மாணவர்களும்.

கல்லூரி ஒன்றில் புரபஸர் பிராக்டிக்கல் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.அவர் முன் இருந்த ஒரு டேபிளின் மீது ஒரு கண்ணாடி கிளாஸ் இருந்தது.அதில் கருப்பாக ஏதோ ஒன்று இருந்தது.மாணவர்கள் மிகுந்த ஆர்வமாக அமர்ந்திருந்தனர்.

புரபஸர் பேச ஆரம்பித்தார்"ஹலோ டியர்ஸ் எப்படி இருக்கிறீர்கள்.இன்றைக்கு நாம் ஒரு வித்தியயசமான பிராக்டிக்கல்ஸ் செய்யப் போகிறோம்.நம்முடைய சகிப்புத்தன்மை மட்டும் அல்ல நம்முடைய கூர்மையான பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று இன்றைக்கு கற்றுக்கொள்ளப் போகிறோம்.

மாணவர்கள் உற்சாகமாக கோரசாக "ஓகே" சார்.

புரபஸர் மீண்டும்"டியர் ஸ்டூடண்ட் இந்த கிளாசில் சாக்கடை நீர் உள்ளது.இதை நான் என்ன செய்கிறேன் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.அதன் பின் இந்த கிளாசை உங்கள் அனைவரிடமும் தருவேன்.நீங்கள் ஒவ்வொருவரும் அப்படியே செய்ய வேண்டும்.சரியா?

கிளாசை எடுத்து மாணவர்கள் அனைவருக்கும் முன்பாக புரபசர் தன் விரலை அந்த கிளாசில் உள்ள நீரில் முக்கி எடுத்து தன் நாக்கில் வைத்தார்.அனைத்து மாண்வர்களும் முகம் சுளித்துக்கொண்டனர்.கிளாஸ் மாணவர்களிடம் வந்தது.

அனைத்து மாணவர்களும் புரபஸர் என்ன செய்தாரோ அதை அப்படியே முகம் சுளித்துக்கொண்டு செய்தனர்.இரண்டு மூன்று மாண்வர்கள் வாந்தி எடுக்கவும் செய்தனர்.

மாணவர் தலைவன் எழந்தான் சார் நீங்கள் இப்படி செய்தது நியாயமில்லை.எப்படி இந்த சாக்கடை நீரை நாக்கில் வைக்க சொல்லலாம் என்று கேட்டான்.

உடனே புரபஸர் எழுந்து அந்த மாணவனை அமரச் சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தார்"மை டியர் ஸ்டூடண்ட் உங்களை யார் சாக்கடை நீரை நாக்கில் வைக்க சொன்னது.நான் செய்வது போல் செய்ய சொன்னேன் அவ்வளவுதான்.நான் சாக்கடை நீரை நாக்கில் வைக்கும் படி உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் அளவுக்கு அறிவில் குறைவுள்ளவனா?நான் என்ன செய்தேன் என்பதை நீங்கள் கூர்ந்து கவனிக்கவில்லை என்பது இதில் இருந்து புரிந்து கொண்டேன்.நான் என்ன செய்தேன் தெரியுமா?கிளாசில் இருந்த தண்ணீரை என் விரலால் நனைத்த்து உண்மைதான்.ஆனால் என் நாக்கில் வைத்த விரல் அந்த நீரில் நனைத்த விரலை இல்லை.மற்றொரு விரலை"என்று கூறினார்.

மாணவர்கள் அனைவரும் வாய் அடைத்து போனார்கள்.

ஊருல போகிறவன் ,வருகிறவன் பேச்சை எல்லாம் கேட்டால் இப்படித்தான் இருக்கும்.

ஒரு தந்தையும்,மகனும் பட்டணத்துக்கு போய் ஒரு கழுதை வாங்கி வந்தனர்.வரும் வழியில் தந்தை கழுதை மேல் ஏறிக்கொண்டார்.

சிறிது தூரம் சென்றதும் ரோட்டில் போயிக்கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் "என்ன கொடுமை இது சின்ன பையனை நடக்க வைத்து விட்டு இந்த கிழவன் சொகுசாக போகிறான் பாரு என்று திட்டிக்கொண்டே போனான்.

உடனே தகப்பன் கழுதையில் இருந்து இறங்கி தன் மகனை கழுதையில் ஏற்றினான்.சிறிது தூரம் போனவுடன் இன்னொருவன் சொன்னான் பாவம் கிழவனை நடக்கவிட்டு இந்த சின்ன பையன் பாரு சொகுசா போறான்.இரண்டு பேறும் ஏறிப்போக வேண்டியது தானே என்று சொல்லிக்கொண்டே சென்றான்.

உடனே அந்த தகப்பனும் மகனுடன் சேர்ந்து கழுதையில் ஏறிக்கொண்டார்.சிறிது தூரம் சென்ற உடன் இன்னொருவன் சொன்னான் படுபாவிகள் பாவம் அந்த வாயில்லா ஜீவனை எப்படி சித்ரவதை செய்கிறார்கள் என்று.

தகப்பனுக்கும்,மகனுக்கும் இது மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.உடனே கழுதையில் இருந்து இறங்கி இருவரும் நடந்தே வந்தனர்.சிறிது தூரம் சென்றவுடன் வேறு ஒருவன் வந்து சொன்னான் " காசு கொடுத்து கழுதையை வாங்கி அதில் ஏறிப்போகாமல் நடந்து செல்கிறார்கள் முட்டாள்கள் என்று.

என்ன நண்பர்களே ஒன்னுமே புரியவில்லையா?ஊருல போகிறவன் ,வருகிறவன் பேச்சை எல்லாம் கேட்டால் இப்படித்தான் இருக்கும்.நாம எதை செய்தாலும் குறைதான் சொல்லுவார்கள்.ஆகவே மற்றவர்கள் சொல்லும் அனைத்தையும் நடைமுறைப்படுத்தக்கூடாது.

கழுதையும்,மனிதர்களும்

நீச்சல் சாஸ்த்திரம் தெரியுமா?

ஒரு பண்டிதர் ஒருவர் மிகவும் படித்துவிட்டோம் என்ற மமதையில் அனைவரையும் மிகவும் கேவலமாக பேசி வந்தார்.

ஒரு முறை ஒரு காட்டாற்றை கடந்து கிராமத்துக்கு செல்லவேண்டியதாயிற்று.அந்த பண்டிதர் ஆற்றின் கரையில் இருந்த பரிசல் ஓட்டுபவனை வாடகைக்கு அமர்த்தி ஆற்றை கடக்க தீர்மானித்தார்.

பரிசலில் ஏறியவுடன் சிறிது நேரம் அமைதியாக இருந்த பண்டிதர் மெதுவாக

பரிசல்காரனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.

பண்டிதர்:பரிசல்காரா,பரிசல்காரா உனக்கு அர்தசாஸ்திரம் தெரியுமாடா?

பரிசல்காரன்:(மிகவும் வருத்தமாக)ஐயா ,நான் படிக்காதவன் ஐயா எனக்கு தெரியாதுங்கையா.

பண்டிதர்:போட முட்டாள்.வாழ்க்கையில் கால்வாசியை வீணாக்கிவிட்டாய்.

பரிசல்காரன்.ஐயோ கடவுளே கால்வாசி போச்சா.???

மறுபடியும் சிறிது தூரம் சென்றவுடன் பண்டிதர் மறுபடியும் பேச ஆரம்பித்தார்.

பண்டிதர்:ஓ பரிசல்காரா உனக்கு பூகோள சாஸ்திரமாவதும் தெரியுமாடா?

பரிசல்காரன்:ஐயா,எனக்கு அதுவும் தெரியாது.

பண்டிதர்:அட மடையா உன் வாழ்க்கையில் அரைவாசியை வீணடித்துவிட்டாயடா.

பரிசல்காரன் கவலையோடு பரிசலை செலுத்த ஆரம்பித்தான்.பரிசல் ஆற்றின் மையப்பகுதியை நெருங்கிக்கொண்டிருந்தது.பண்டிதர் பெருமிதத்துடன் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

பண்டிதர்:பரிசல்காரனே உனக்கு வானசாஸ்திரமாவதும் தெரியுமாடா?

பரிசல்காரம் ஓவென்று அழுதான்

பரிசல்காரன்:எனக்கு அதும் தெரியாது ஐயா.

பண்டிதர்:போடா மூடனே உன் வாழ்க்கையில் முக்கால்வாசியை நீ வீணாக்கிவிட்டாயடா.

இதற்கு பின் பரிசல்காரம் மிகவும் வருத்தத்தோடு பரிசலை செலுத்த ஆரம்பித்தான்.பரிசல் ஆற்றின் நடுப்பகுதியை அடைந்தது.இந்த நேரத்தில் காற்று பலமாக அடிக்க ஆரம்பித்தது.புயல் மழை வரத்தொடங்கியது.பண்டிதர் முகத்தில் இருந்த பெருமை மறைந்து பயம் தொத்திக்கொண்டது.பரிசலில் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்து ஒரு பகுதி தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது.இந்த நேரத்தில் பரிசல்காரன் மெல்ல பண்டிதரை நோக்கி பேச ஆரம்பித்தான்.

பரிசல்காரன்:ஐயா பண்டிதரே உங்களுக்கு நீச்சல் சாஸ்திரம் தெரியுமா?

பண்டிதர்:என்னது நீச்சல் சாஸ்திரமா?நான் இதுவரைக் கேள்விப்பட்டதில்லையே?

பரிசல்காரன்:அட அநியாயமே.மண்ணிச்சிருங்க ஐயா.உங்க வாழ்க்கையில் முழு பகுதியும் வீணாகிவிட்டது.

என்று சொல்லி ஆற்றில் குதித்து நீந்த ஆரம்பித்தான்.பண்டிதரின் நிலை என்ன ஆகியிருக்கும் என்பதைபற்றி நான் சொல்லி உன்களுக்கு தெரியவேண்டி இருக்கது இல்லீங்களா.பெருமை ஒரு மனிதனை அழித்தே விடும்.எவ்வளவு சிறிய மனிதர்களையும் நாம் அற்பமாக நினக்கக்கூடாது.

பிரசங்கி 7:8 ..(பைபிள்).......................... பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.

யாக்கோபு 4:6..(பைபிள்).......................... தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது

இந்திய நண்டு மேலே ஏறாது

இந்திய நண்டு

நண்டுகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று கூடைகளில் நண்டுகளை ஏற்றி அதை கப்பல்களில் அனுப்புவது வழக்கம்

.அந்த ஒவ்வொரு கூடைகளிலும் எந்த நாட்டை சேர்ந்த நண்டுகள் என்ற பெயரும் எழுதி இருக்கும்.

இது போலவே ஓரு முறை நண்டுகள் ஏற்றி அனுப்பப்பட்டது

.சிறிது நேரம் கழித்து அந்த கப்பல் தளத்தில் இருந்து ஒரு செய்தி அந்த நிறுவனத்துக்கு வந்தது.நண்டு கூடைகள் எல்லாம் சரியாக மூடி அனுப்பப்பட்டு இருந்தது.ஆனால் ஒரே ஒரு கூடை மட்டும் திறந்த நிலையில் அனுப்பப்பட்டு உள்ளதாகவும்,அவைகள் உள்ள நண்டுகள் வேளியே வந்துவிடும் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அதிகாரி பதட்டத்துடன் சொன்னார்.

உடனே நிறுவன மேனேஜர் அந்த அதிகாரியிடம்

"சார் திறந்திருக்கும் கூடை எந்த நாட்டுடைய நண்டுகள் என்பதை அதில் இருக்கும் பெயரைப் பார்த்து சொல்லுங்கள்.

அந்த அதிகாரி அந்த கூடையில் உள்ள பெயரை பார்த்து சொன்னார்

"இந்தியா" என்று

உடனே அந்த நிறுவன மேனேஜர்

:அப்பாடா இப்பொழுதுதான் உயிரே வந்தது.சார் நீங்கள் எந்த கவலையும் படவேண்டாம்.அந்த நண்டுகள் வெளியே வராது என்றார்.

அந்த அதிகாரிக்கு கோபம் வந்தது

;என்ன சொல்லுகிறீர்கள்.திறந்திருக்கும் கூடையில் இருக்கும் நண்டுகள் எப்படி வெளியே வராமல் இருக்கும்.?

நிறுவன மேனேஜர்

;சார் கோபபடாதீர்கள்.திறந்திருக்கும் கூடையில் இருப்பவை இந்திய நண்டுகள்.கண்டிப்பாக வெளியே வர முயற்சி செய்யும்.மேலே வரை வரும்.ஆனால் கீழே இருக்கும் நண்டு சும்மா இருக்காது.மேலே ஏறும் நண்டின் காலை பிடித்து இழுத்து விட்டு இது மேலே ஏறும்.இன்னொன்று இதன் காலை பிடித்துவிட்டு அது தான் மேலே ஏற முயற்சிக்கும்.ஆக மொத்தம் எந்த நண்டும் கூடையை விட்டு வெளியே வராது.ஏன் என்றால் இந்திய நண்டுகள் எப்பவுமே சுயநலம் தான் என்றார்.

அந்த அதிகாரி

:!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!

ஆம்லெட் பெரிசா?கட்லெட் பெரிசா

ஒரு ஊரில் ஒரு மாடும்,கோழியும் இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்தார்கள்.

இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்லுவது வழக்கம்.

ஒரு நாள் மாடு கோழியை கூப்பிட்டு பக்கத்து கிராமத்துக்குக்கு போய் வருவோமா என்று கேட்டது.

உடனே கோழி சம்மதித்தது.இருவரும் சேர்ந்து பக்கத்து கிராமத்தை அடைந்தனர்.

கிராமத்தை நெருங்கியவுடன் குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்டது.உடனே மாடு கோழியைப் பார்த்து நண்பா இது என்ன சத்தம்.என்று கேட்டது.

கோழி உடனே வேகமாக சென்று அந்த இடத்தை பார்த்துவிட்டு வந்து மாட்டிடம் அந்த குழந்தைகள் பாவம் என்று சொன்னது.

உடனே மாடு கேட்டது ஏன் பாவம் என்று சொல்லுகிறாய்.

கோழி சொன்னது அந்த இடம் ஒரு அனாதை ஆசிரமம்.அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் இல்லை என்று சொன்னது.

உடனே மாடு சொன்னது நாம் ஏதாவது இந்த குழந்தைகளுக்கு உதவி செய்யலாம என்று கேட்டது.

உடனே கோழி சரி ஆனால் என்ன உதவி செய்வது என்று கேட்டுவிட்டு ஏதோ நினைவு அந்தது போல் தலையை ஆட்டிவிட்டு நான் இந்த குழந்தைகளுக்கு எல்லோருக்கும் ஒவ்வொரு ஆம்லெட் கொடுத்து விடுகிறேன்.

மாடு ஆப்போ நான் என்ன கொடுக்கிரது?

கோழி சொன்னது நீ இவங்க எல்லோருக்கும் ஒரு கட்லெட் கொடுத்து விடு என்று கூலாக பதில் சொன்னது

மாடு பதில் சொல்லாமல் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது.

என்ன ஒன்னும் புரியவில்லையா?

பின்ன என்னங்க தான் செத்தாத்தான் எல்லா பிள்ளைகளுக்கும் கட்லெட் கொடுக்க முடியும்ன்னு மாட்டுக்கு தெரிஞ்சு போச்சில்ல.!!!!!!!!!!!