இந்திய நண்டு
நண்டுகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று கூடைகளில் நண்டுகளை ஏற்றி அதை கப்பல்களில் அனுப்புவது வழக்கம்
.அந்த ஒவ்வொரு கூடைகளிலும் எந்த நாட்டை சேர்ந்த நண்டுகள் என்ற பெயரும் எழுதி இருக்கும். இது போலவே ஓரு முறை நண்டுகள் ஏற்றி அனுப்பப்பட்டது
.சிறிது நேரம் கழித்து அந்த கப்பல் தளத்தில் இருந்து ஒரு செய்தி அந்த நிறுவனத்துக்கு வந்தது.நண்டு கூடைகள் எல்லாம் சரியாக மூடி அனுப்பப்பட்டு இருந்தது.ஆனால் ஒரே ஒரு கூடை மட்டும் திறந்த நிலையில் அனுப்பப்பட்டு உள்ளதாகவும்,அவைகள் உள்ள நண்டுகள் வேளியே வந்துவிடும் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அதிகாரி பதட்டத்துடன் சொன்னார். உடனே நிறுவன மேனேஜர் அந்த அதிகாரியிடம்
"சார் திறந்திருக்கும் கூடை எந்த நாட்டுடைய நண்டுகள் என்பதை அதில் இருக்கும் பெயரைப் பார்த்து சொல்லுங்கள். அந்த அதிகாரி அந்த கூடையில் உள்ள பெயரை பார்த்து சொன்னார்
"இந்தியா" என்று உடனே அந்த நிறுவன மேனேஜர்
:அப்பாடா இப்பொழுதுதான் உயிரே வந்தது.சார் நீங்கள் எந்த கவலையும் படவேண்டாம்.அந்த நண்டுகள் வெளியே வராது என்றார். அந்த அதிகாரிக்கு கோபம் வந்தது
;என்ன சொல்லுகிறீர்கள்.திறந்திருக்கும் கூடையில் இருக்கும் நண்டுகள் எப்படி வெளியே வராமல் இருக்கும்.? நிறுவன மேனேஜர்
;சார் கோபபடாதீர்கள்.திறந்திருக்கும் கூடையில் இருப்பவை இந்திய நண்டுகள்.கண்டிப்பாக வெளியே வர முயற்சி செய்யும்.மேலே வரை வரும்.ஆனால் கீழே இருக்கும் நண்டு சும்மா இருக்காது.மேலே ஏறும் நண்டின் காலை பிடித்து இழுத்து விட்டு இது மேலே ஏறும்.இன்னொன்று இதன் காலை பிடித்துவிட்டு அது தான் மேலே ஏற முயற்சிக்கும்.ஆக மொத்தம் எந்த நண்டும் கூடையை விட்டு வெளியே வராது.ஏன் என்றால் இந்திய நண்டுகள் எப்பவுமே சுயநலம் தான் என்றார். அந்த அதிகாரி
:!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!
0 comments:
Post a Comment