நீச்சல் சாஸ்த்திரம் தெரியுமா?

ஒரு பண்டிதர் ஒருவர் மிகவும் படித்துவிட்டோம் என்ற மமதையில் அனைவரையும் மிகவும் கேவலமாக பேசி வந்தார்.

ஒரு முறை ஒரு காட்டாற்றை கடந்து கிராமத்துக்கு செல்லவேண்டியதாயிற்று.அந்த பண்டிதர் ஆற்றின் கரையில் இருந்த பரிசல் ஓட்டுபவனை வாடகைக்கு அமர்த்தி ஆற்றை கடக்க தீர்மானித்தார்.

பரிசலில் ஏறியவுடன் சிறிது நேரம் அமைதியாக இருந்த பண்டிதர் மெதுவாக

பரிசல்காரனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார்.

பண்டிதர்:பரிசல்காரா,பரிசல்காரா உனக்கு அர்தசாஸ்திரம் தெரியுமாடா?

பரிசல்காரன்:(மிகவும் வருத்தமாக)ஐயா ,நான் படிக்காதவன் ஐயா எனக்கு தெரியாதுங்கையா.

பண்டிதர்:போட முட்டாள்.வாழ்க்கையில் கால்வாசியை வீணாக்கிவிட்டாய்.

பரிசல்காரன்.ஐயோ கடவுளே கால்வாசி போச்சா.???

மறுபடியும் சிறிது தூரம் சென்றவுடன் பண்டிதர் மறுபடியும் பேச ஆரம்பித்தார்.

பண்டிதர்:ஓ பரிசல்காரா உனக்கு பூகோள சாஸ்திரமாவதும் தெரியுமாடா?

பரிசல்காரன்:ஐயா,எனக்கு அதுவும் தெரியாது.

பண்டிதர்:அட மடையா உன் வாழ்க்கையில் அரைவாசியை வீணடித்துவிட்டாயடா.

பரிசல்காரன் கவலையோடு பரிசலை செலுத்த ஆரம்பித்தான்.பரிசல் ஆற்றின் மையப்பகுதியை நெருங்கிக்கொண்டிருந்தது.பண்டிதர் பெருமிதத்துடன் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

பண்டிதர்:பரிசல்காரனே உனக்கு வானசாஸ்திரமாவதும் தெரியுமாடா?

பரிசல்காரம் ஓவென்று அழுதான்

பரிசல்காரன்:எனக்கு அதும் தெரியாது ஐயா.

பண்டிதர்:போடா மூடனே உன் வாழ்க்கையில் முக்கால்வாசியை நீ வீணாக்கிவிட்டாயடா.

இதற்கு பின் பரிசல்காரம் மிகவும் வருத்தத்தோடு பரிசலை செலுத்த ஆரம்பித்தான்.பரிசல் ஆற்றின் நடுப்பகுதியை அடைந்தது.இந்த நேரத்தில் காற்று பலமாக அடிக்க ஆரம்பித்தது.புயல் மழை வரத்தொடங்கியது.பண்டிதர் முகத்தில் இருந்த பெருமை மறைந்து பயம் தொத்திக்கொண்டது.பரிசலில் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்து ஒரு பகுதி தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது.இந்த நேரத்தில் பரிசல்காரன் மெல்ல பண்டிதரை நோக்கி பேச ஆரம்பித்தான்.

பரிசல்காரன்:ஐயா பண்டிதரே உங்களுக்கு நீச்சல் சாஸ்திரம் தெரியுமா?

பண்டிதர்:என்னது நீச்சல் சாஸ்திரமா?நான் இதுவரைக் கேள்விப்பட்டதில்லையே?

பரிசல்காரன்:அட அநியாயமே.மண்ணிச்சிருங்க ஐயா.உங்க வாழ்க்கையில் முழு பகுதியும் வீணாகிவிட்டது.

என்று சொல்லி ஆற்றில் குதித்து நீந்த ஆரம்பித்தான்.பண்டிதரின் நிலை என்ன ஆகியிருக்கும் என்பதைபற்றி நான் சொல்லி உன்களுக்கு தெரியவேண்டி இருக்கது இல்லீங்களா.பெருமை ஒரு மனிதனை அழித்தே விடும்.எவ்வளவு சிறிய மனிதர்களையும் நாம் அற்பமாக நினக்கக்கூடாது.

பிரசங்கி 7:8 ..(பைபிள்).......................... பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்.

யாக்கோபு 4:6..(பைபிள்).......................... தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்தக் கதை வேதம் புதிது படத்திலும் அமைந்துள்ளது. படம் பார்த்த பெரும்பான்மை இந்தக் காட்சி கதையின் தார்ப்பரியத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஆந்தையார் said...

//இந்தக் கதை வேதம் புதிது படத்திலும் அமைந்துள்ளது. படம் பார்த்த பெரும்பான்மை இந்தக் காட்சி கதையின் தார்ப்பரியத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை.//

நன்றி நண்பரே உங்கள் தகவலுக்கு.எனக்கு இந்த விஷயம் புதியது.இது மற்ற பக்கம் கேட்ட கதை.அவ்வளவுதான்