வீட்டைப் பூட்டினேனா?

42-18514422.jpg

குடும்பத்தோடு வீட்டைப் பூட்டிக்கொண்டு அவசரமாக வெளியேறும் குடும்பத் தலைவிக்கு எண்ணம் எல்லாம் வீட்டின் மீது தான் இருக்கும்.

போனவாரம் கூட பக்கத்து தெருவில் களவு நடந்தது. சென்ற மாதம் அடுத்த ஊரில் பெரிய திருட்டு நடந்தது என்றெல்லாம் அவளுடைய மனம் சிந்தித்துக் கொண்டே இருக்கும்.

மட்டுமன்றி வீட்டைப் பூட்டினேனா ? நான் குடும்பத்தோடு வந்ததை யாராவது பார்த்திருப்பார்களோ ? பக்கத்து வீட்டுக்காரன் மதில் ஏறி குதிப்பானோ என்றெல்லாம் நினைத்து நினைத்து பயணம் முடியும் வரை நிம்மதியின்றி இருப்பாள்.

அதே நேரம், ஒன்றுமே இல்லாத ஒரு வீட்டை, காலியாக இருக்கும் ஒரு வீட்டை விட்டுச் செல்வதாக இருந்தால் எந்த கவலையும் இருக்காது.

"எங்கே உங்கள் செல்வங்கள் இருக்கின்றனவோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்" என்கிறார் இயேசு.

செல்வத்தை மண்ணுலகில் சேர்த்து வைக்காமல் விண்ணுலகில் சேர்த்து வைப்பதே நல்லது என்பதே இயேசுவின் போதனை.

இவ்வுலக செல்வங்களை விட, ஈகை, அன்பு, சமாதானம், பொறுமை என நல்ல செல்வங்களை சேமிக்கும் போது அவை விண்ணரசில் நமது செயல்களாக, செல்வங்களாக சேமிக்கப்படும்.

விண்ணுலகில் நிறைய செல்வம் சேமிக்க வேண்டும் என நாம் முடிவெடுத்தால் நிறைய நல்ல செயல்களை செய்யும் ஊக்கம் வரும். எனவே விண்ணக செல்வங்களை சேமியுங்கள் என்கிறார் இயேசு.

விண்ணுலக செல்வங்களை திருடர் திருடுவதில்லை, பூச்சியோ துருவோ அழிப்பதில்லை என்கிறார் இயேசு.

நிலையான வாழ்வுக்குரியது விண்ணக செல்வங்களே.

வானத்துப் பறவைகளைப் போல சுதந்திரமாய் பறக்கலாம் மனம் இலகுவாய் இருந்தால். உலக செல்வ ஆசைகளினால் கால்களில் இயந்திரக் காலணிகளை அணிந்து கொண்டால் பறப்பது இயலாது.

எனவே, சிந்திப்போம்.

தேவையானது எது ?

உண்மை, அன்பு, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம், பொறுமை, இறையன்பு எனும் உயரிய கொள்கைகளைக் கொண்டு விண்ணக வீட்டில் செல்வங்களைச் சேமிப்போம்.

விண்ணுலக வாழ்வுக்கான தயாரிப்புக் கூடமாகட்டும்
மண்ணுலக வாழ்வு.

http://jebam.wordpress.com/2008/02/25/money/

2 comments:

நாமக்கல் சிபி said...

//உண்மை, அன்பு, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம், பொறுமை, இறையன்பு எனும் உயரிய கொள்கைகளைக் கொண்டு விண்ணக வீட்டில் செல்வங்களைச் சேமிப்போம்.
//

அட! அப்படியே ஆகட்டும்!

ஆந்தையார் said...

உங்கள் வரவு நல்வரவாகட்டும்