முதலையை ஜெயித்ததா காளை?

ஒரு ஊரில் ஒரு மன்னன் தன் மகளுக்கு திருமணம் செய்ய எண்ணி சுயம்வரம் ஏற்பாடு செய்து தன் பக்கத்து ஊர்களில் உள்ள இளவரசர்களுக்கு எல்லாம் செய்தி ஓலை அனுப்பினான்.

சுயம்வரம் என்றாலே கட்டிளம் காளைகளுக்கு சொல்லவா வேண்டும்.புயலென புடை சூழ வந்தார்கள்.சுயம்வர நாளில் மண்டபத்தில் அனைத்து இளவரசர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இராஜா எழுந்து தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

எனக்கு அன்பான இளவரசர்களே என் மகளின் சுயம்வரம் நிகழ்ச்சியில் உங்களை காண்பதில் மகிழ்ச்சி.எனக்கு வரப்போகும் மருமகன் இந்த நாட்டின் வருங்கால அரசன் என்பதால் நான் என் மகளுக்கு ஒரு வீரமுள்ளவனைத்தான் மணமகனாக தேர்ந்தெடுக்க முடிவெடுத்துள்ளேன்.


இளவரசர்கள் ஆரவார ஒலி எழுப்பினார்கள்.

ராஜா மீண்டும் தொடர்ந்தார்.


சரி இந்த மணடபத்தின் அருகில் உள்ள நீச்சல் குளத்திற்கு நாம் செல்லுவோம் என்று சொல்லி அந்த நீச்சல் குளக்கரையண்டை சென்றார்.

அங்கு சென்றவுடன் இந்த குளத்தின் ஒரு முனையில் குதித்து மறுமுனை வரை நீந்தி மேலே வரவேண்டும் என்பதே என் போட்டி.இதில் வெற்றி பெறு இளைஞருக்கு என் மகளை திருமணம் செய்து கொடுப்பேன்.

இதக்கேட்டவுடன் அனைத்து இளவரசர்களும் நான் முதல்,நீ முதல் என்று போட்டியிட முடிவு செய்தனர்.ஆனால் அதற்குள் மன்னர் மீண்டும் குறுக்கிட்டு நான் இதன் நிபந்தனைகளை இன்னும் முழுமையாக சொல்லவில்லை.இந்த குளத்தில் இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருக்கும் 50 முதலைகள் உண்டு என்று சொல்லி முடித்ததுதான் தாமதம் எல்ல இளவரசர்களும் 10 பின்னோக்கி நகர்ந்தனர்.


இந்த சூழ்நிலையில் தான் அந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.அது என்ன ஒரு இளவரசன் மட்டும் அந்த குளத்துக்குள் பாய்ந்து குதித்து நீந்த ஆரம்பித்தான்.

எல்லா முதலைகளும் அவனை சூழ்ந்து வந்த நிலையில் அவன் அவகளை எல்லாம் மேற்கொண்டு குளத்தின் மறுமுனையில் வெற்றி வீரனாக முதலையை வென்ற காளையக வெளியே வந்தார்.

உடனே மன்னர் ஓடிச்சென்று அந்த இளவரசனை கட்டிப் பிடித்து முத்தமிட்டு தன் மகளை கூப்பிட்டு மாலை அணிவிக்க கட்டளையிட்டார்.

ஆனால் அந்த வீர இளவரசனோ அதை ஏற்றுக்கொள்ளாமல் ராஜாவை பார்த்து சொன்னான்.மாலை போடுவதெல்லாம் இருக்காட்டும்.எனக்கு முதலில் அந்த விஷயம் தெரிந்தாகவேண்டும் என்றான்.

ராஜாவும்,மக்களும்,மற்ற இளவரசர்களும் சன்தேக குறியுடன் அவானியே வத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்த இளவரசன் சொன்னான் "ராஜாவே முதலில் என்னை இந்த குளத்தில் தள்ளிவிட்டவன் யார் என்று எனக்கு நீங்கள் சொல்ல வெண்டும் என்றான்.


இதை கேட்ட அனைவரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.ஏன் நீங்கள் சிரிக்கவில்லை.சிரிங்க ஹி ஹி ஹி ஹி

2 comments:

நாமக்கல் சிபி said...

கட்டிழம்காளைகளுக்கு - கட்டிளம் காளைகளுக்கு

செறுமிக்கொண்டு - செருமிக்கொண்டு

ஆரவார ஒளி - ஆரவார ஒலி

எழுத்துப் பிழை மற்றும் வாக்கிய அமைப்புகளை ஒரு முறை சரிபார்க்கவும்!

ஆந்தையார் said...

குறைகளை சுட்டி காண்பித்ததற்கு நன்றி