கொக்கு எப்படி இருக்கும்?

ஒரு ஊர் கோடியில் மக்கள் கூட்டம் அழுகுரலோடு அலைமோதிக்கொண்டிருந்தது.அந்த வழியே போன குருடன் ஒருவன் ஒரு மனிதனை அழைத்து இந்த அழுகையின் சத்தத்துக்கு காரணம் என்ன என்று வினவினான்.

அந்த மனிதன் சொன்னான் ஐயா ஒரு குழந்தை செத்து போய்விட்டது அது தான் இந்த சத்தத்துக்கு காரணம் என்ரு சொன்னான்.

உடனே குருடன் கேட்டான் எப்படி குழந்தை செத்தது என்று?

அந்த மனிதர்:பால் குடிக்கும் போது விக்கி செத்துப்போனது என்றான்.

குருடன்:ஐயா பால் குடிக்கும் போதா?அப்படின்னா அந்த பால் எப்படி இருக்கும்.?

அந்த மனிதர்:யோவ் பால் வெள்ளையாய் இருக்கும்

குருடன்:ஐயா மண்ணிச்சுக்குங்க,வெள்ளை எப்படி ஐயா இருக்கும்?

அந்த மனிதர்:(மிகவும் சலித்துக்கொண்டு)கொக்கு மாதிரி இருக்கும்யா.

குருடன்:ஐயா மண்ணிச்சுக்குங்க நான் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுக்கறேன்.

அந்த மனிதர்:சரி கேட்டுத் தொலையா.

குருடன் :ஐயா அந்த கொக்கு எப்படி ஐயா இருக்கும்?

அந்த மனிதர்:மிகவும் கோபமாக தன் கையை வளைத்து இந்த இப்படித்தான் இருக்கும் என்று சொன்னார்.

அந்த குருடன் அந்த மனிதரின் கையை தடவிபார்த்து விட்டு ஐயா இவ்வளவு பெரிசு குழந்தை வாயில் போனா குழந்தை சாகாமல் இருக்குமா என்று கேட்டுவிட்டு நடையை கட்டினான்

பதில் சொன்ன மனிதர் தலையில் அடித்துக்கொண்டார்.

2 comments:

நாமக்கல் சிபி said...

//அந்த குருடன் அந்த மனிதரின் கையை தடவிபார்த்து விட்டு ஐயா இவ்வளவு பெரிசு குழந்தை வாயில் போனா குழந்தை சாகாமல் இருக்குமா என்று கேட்டுவிட்டு நடையை கட்டினான்

பதில் சொன்ன மனிதர் தலையில் அடித்துக்கொண்டார்.
//

:))

ஆந்தையார் said...

நன்றி