சென்னையில் வீட்டு வாடகை உயர்வு - விளைவுகள்
அங்கே என்ன ஏலம் நடக்குது?வாடகை வீடுதான். யாரு அதிகமா 'வாடகை' ஏலம் எடுக்கறாங்களோ, அவுங்களுக்கு வீடு கொடுப்பாங்களாம்.---பாஸ், இவரை கடத்தலாமா, சொந்த வீடு வெச்சிருக்காரு?லூசாப்பா நீ, அவரை விடு. இவரைப் பாரு. வாடகை குடுத்துண்டு ஒரு வீட்டிலே இருக்காரு. நினைச்சிப் பாரு, எவ்ளோ பணமிருக்குமின்னு.---நயா பைசா வரதட்சிணை வேண்டாம்னு சொன்ன மாப்பிள்ளையை வேண்டாம்னுட்டியாமே? ஏன்?வரதட்சிணைக்குப் பதிலா 5 வருஷத்துக்கு அவர் வீட்டு வாடகையை நான் குடுக்கணுமாம். கட்டுப்படியாகுமா?---எல்.ஐ.சியின் 'ஜீவன் வாடகை' பாலிசி.5 வருஷத்திற்கு சிறிய ப்ரிமியம் கட்டுங்க. பிறகு உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்கள் வாடகையை எல்.ஐ.சி கட்டும்.---வழியில் கிடந்த ஒரு விளக்கை எடுத்து தேய்த்தவுடன், ஒரு பூதம் வந்ததுஏதாவது ஒரு வரம் கேள்.எனக்கு ஒரு பெண்ணின் மனசில் என்ன நினைக்கிறான்னு தெரியணும்.அது ரொம்ப கஷ்டம்பா. அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு கடவுளுக்கே கூட தெரியாது. வேறே ஏதாவது கேளு.ஓகே. சென்னையில் ரெண்டு வருஷத்திற்கான என் வீட்டு வாடகையை எனக்கு கொடுத்துவிடு.(பூதம் ஒரு நிமிடம் யோசித்து)... சரி... எந்த பெண் மனசைப்பத்தி உனக்கு தெரியணும்?
http://boochandi.blogspot.com/2008/03/blog-post_27.html
சென்னையில் வீட்டு வாடகை உயர்வு - விளைவுகள்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
ரொம்ப சரி ... எங்கேப் போய் முடியுமோ தெரியலை. அரசாங்கம் எதுவும் செய்ய முடியாதா?? சம்பளத்தில் பாதி வாடகை என்றால் என்ன செய்வது.
கொஞ்சம் அங்கங்கே கேப் விட்டு எழுதுனீங்கன்னா நல்லா இருக்கும்!
அப்புறம் ஒரு பதிவை பப்ளிஷ் பண்ணுறதுக்கு முன்னாடி எழுத்துப் பிழைகளை ஒரு முறை சரி பார்த்துடுங்க!
போகப் போக சரியாய்டும்!
//ஒரு பூதம் வந்ததுஏதாவது ஒரு வரம் கேள்.எனக்கு ஒரு பெண்ணின் மனசில் என்ன நினைக்கிறான்னு தெரியணும்.அது ரொம்ப கஷ்டம்பா. அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு கடவுளுக்கே கூட தெரியாது. வேறே ஏதாவது கேளு.ஓகே. சென்னையில் ரெண்டு வருஷத்திற்கான என் வீட்டு வாடகையை எனக்கு கொடுத்துவிடு.(பூதம் ஒரு நிமிடம் யோசித்து)... சரி... எந்த பெண் மனசைப்பத்தி உனக்கு தெரியணும்?
//
:))
அதென்னவோ உண்மைதான்!
வாடகை எல்லாம் கன்னா பின்னான்னுதான் போகுது சென்னைலே!
வந்தவர்கள் அனைவருக்கும் நன்றிங்க
என் பதிவுக்கு உரல் கொடுத்த ஆந்தையாருக்கு ஒரு ஓஓஓஓஓஓ!!!
ஓ போட்ட சின்னபையன் அண்ணாவுக்கு நன்றி
இது எல்லாமே விகடன்லயோ குமுதத்துலயோ இப்ப ரீஜண்டா படிச்சிருக்கேனே!!
எப்பிடி இருந்தாலும் வாழ்த்துக்கள்.
என் பதிவை விகடனுக்கும், குமுதத்துக்கும் ஒப்பிட்ட மங்களூர் சிவாவுக்கு ஒரு ஆஆஆஆஆ!!!
Post a Comment